Sunday, June 23, 2024
Home » டுபாயில் பணிப் பெண்ணாக உள்ள இலங்கையின் தடகள வீராங்கனை

டுபாயில் பணிப் பெண்ணாக உள்ள இலங்கையின் தடகள வீராங்கனை

by sachintha
July 24, 2023 1:06 pm 0 comment

 

கோலூன்றி பாய்தலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இலங்கையின் முன்னணி தடகள வீராங்கனையான சச்சினி பெரேரா தனது குடும்பத்திற்காக டுபாயில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். எனினும் தனது விளையாட்டை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதே 24 வயது சச்சினி தனது விளையாட்டு வாழ்வை கைவிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். தனது தாயின் மருத்துவ செலவுகள் மற்றும் குடும்ப செலவுகளை சமாளிக்கவே அவர் வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக் பேட்டி அளித்துள்ளார். “கோலூன்றி பாய்தலில் இலங்கைக்காக சர்வதேச பதக்கங்களை வெல்லும் பெண்ணாக இருக்க நான் விரும்புகிறேன். வீட்டுப் பணிப் பெண்ணாக இருப்பது எனது வேலை. ஆனால் அந்த வேலை என்னுடையதல்ல நான் ஒரு ஜிம்னாஸ்ட் மற்றும் தடகள வீராங்கனை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சச்சினி பெரேராவின் நிலை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் டுபாயில் தொடர்ந்து பயிற்சிகளை செய்வதற்கு டுபாய் விளையாட்டு நிர்வாகங்களுடன் அங்குள்ள இலங்கை தூதரக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. “நான் டுபாய்க்கு வந்தது எனது தனிப்பட்ட வாழ்க்கை. நான் பணிப் பெண்ணாக வேலை பார்க்கிறேன். நான் நாட்டை விட்டு வெளியேறியபோது எனது தடகள வாழ்வு பற்றி யாரும் கவலைப்படவில்லை. எனவே எனது குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்காக நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.

இப்போது அவர்கள் பணிப் பெண்ணாக வந்தது பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். மீண்டும் இங்கிருந்து வரும்படி கேட்கிறார்கள்” என்றும் சச்சினி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT