Sunday, June 23, 2024
Home » பாசிக்குடாவில் ரூ. 60 மில்லியன் டொலர் முதலீட்டில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

பாசிக்குடாவில் ரூ. 60 மில்லியன் டொலர் முதலீட்டில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

by sachintha
July 24, 2023 12:02 pm 0 comment

இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாக விளங்கும் பாசிக்குடா பிதேசத்தை அடிப்படையாகக் கொண்டு பாரிய சுற்றுலா ஒருங்கிணைப்பு அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலான இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட நிதி முதலீடு செய்யப்பட உள்ளது.

கடந்த வருட ஆரம்பப்பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தம் தலைமைத்துவ ஆற்றல் மற்றும் பரந்த அனுபவங்களின் ஊடாக குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை மீட்டெடுத்து மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றுள்ளார். அவர் முன்னெடுத்து வரும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இச்சுற்றுலா ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக இம்முதலீட்டு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையுடன் தொடர்பான பொருட்கள், சேவைகளை வழங்கக்கூடிய வகையில் ஆடைத்தொழிற்சாலை, பேக் தொழிற்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டல், உணவகங்கள், கொல்ப் விளையாட்டு மைதானம், சூரிய சக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பு, ஆயுர்வேத மத்திய நிலையம், பிரதேசத்தின் பழங்காலப் பொருட்களை உள்ளடக்கிய அரும்பொருட்காட்சியகம், உல்லாசப் பயணிகள் பயன்படுத்தக்கூடிய ஹெலிகொப்டர் ஒடுதளம் என உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் இச்சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் இத்திட்டத்தை 18 மாதங்களில் திட்டதை நிறைவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது 2000 பேர் நேரடி, மறைமுக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதோடு 5000 குடும்பங்கள் இத்திட்டத்துடன் இணைந்திருப்பர் என்றும் அந்த ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டினார்.

மர்லின் மரிக்கார்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT