Wednesday, February 21, 2024
Home » தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் பலி

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் பலி

by Prashahini
July 21, 2023 9:23 am 0 comment

கொழும்பு தலவத்துகொட வெலிபாறை பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிபாறை, தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரிடம் அடையாளம் தெரியாத இருநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வெலிபாறை, தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் சந்தேகநபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT