இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான Dilmah Tea (டில்மா தேயிலை) நிறுவனத்தின் ஸ்தாபகரான மெரில் ஜே பெனாண்டோ இன்று (20) காலை காலமானார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு 93 வயதாகும்.
தற்போது உலகளாவிய ரீதியில் 100 இற்கும் அதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டில்மா தேயிலை நிறுவனத்தை மெரில் பெனாண்டோ 1985 ஆம் ஆண்டு நிறுவியிருந்தார்.
1930 ஆம் ஆண்டு நீர்கொழும்பு, பல்லன்சேன பிரதேசத்தில் பிறந்த மெரில் ஜே பெனாண்டோ, இலங்கையின் தேயிலையையும் இலங்கையின் பெயரையும் உலகுக்கு எடுத்துச் செல்வதில் முன்னோடியாக விளங்கினார்.
மெரில் ஜே பெர்னாண்டோவின் பூதவுடல் நாளை (21) மு.ப. 8.00 மணி முதல் கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
ஆர்தர் ஃபிரடெரிக் ஜோன்ஸ் மற்றும் அவரது மகன்களான டென்னிஸ் மற்றும் அலன் ஜோன்ஸ் ஆகியோருடன் AF Jones & Co நிறுவனத்தில் 1954 இல் தேநீர் உதவியாளராக பணியாற்றியிருந்தார்.