Saturday, July 13, 2024
Home » ஹோட்டல், கலாசார முக்ேகாண விருதுகளை வென்றெடுத்த Heritance Hotels & Resorts

ஹோட்டல், கலாசார முக்ேகாண விருதுகளை வென்றெடுத்த Heritance Hotels & Resorts

by gayan
July 14, 2023 11:06 am 0 comment

Aitken Spence Hotels இன் மதிப்பிற்குரிய முதன்மையான வர்த்தக நாமமாக Heritance Hotels & Resorts விளங்குகின்றது. இது அண்மையில் இலங்கையில் புகழ்பெற்ற Chefs’ Guild நடாத்திய சமையல் கலைப்போட்டியில் தமது சாதனைகளை வெளிக்காட்டியது.

Heritance Ahungalla மற்றும் Heritance Kandalama ஆகியவை முறையே கிழக்கு பிராந்தியத்தின் சிறந்த ஹோட்டல் மற்றும் சிறந்த கலாச்சார முக்கோண ஹோட்டல் ஆகிய விருதுகளை வென்றன. இச்சிறப்புமிக்க சாதனையானது இவ்வர்த்தக நாமத்தின் பாரம்பரிய சமையல் கலையை மேம்படுத்துவதாக அமைகின்றது.

கடுமையான தரநிலைகள் மற்றும் போட்டித்தன்மையைக் கொண்ட இப்புகழ்பெற்ற போட்டியானது நாடு முழுவதுமுள்ள திறமையான சமையல் கலை நிபுணர்களை ஈர்த்தது. Heritance Ahungalla அவ்வாறே தமது சிறப்பான சமையற்கலை திறமைகளையும் வெளிப்படுத்தியது. நுவன் சந்திமல் இன் மிகச்சிறந்த நேரடி சமையல் கலை நிபுணத்துவம், ‘“Most Outstanding Sri Lankan Live

Cooking”என்ற விருதினை வென்றது. அருண சந்தனவின் பேஸ்ட்ரி தயாரிப்பின் தேர்ச்சிக்கு “Most Outstanding Pastry Showpiece” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக மல்ஷி ரெபேக்காவின் கலவையியல் நிபுணத்துவத்துக்கு “Most Outstanding

Overall Mixologist” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மல்ஷியின் நிபுணத்துவத்துக்கு 1 அதிசிறந்த தங்க பதக்கம், 1தங்க பதக்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 5 பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரது நேர்த்தியான மற்றும் புத்தாக்கம் மிக்க கொக்டெய்ல்களின் உருவாக்கம், அவரது படைப்பாற்றல் மற்றும் தேர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

சமையல் கலைப் போட்டியில் மதுஷங்க ராஜபக்ஷ மிகச் சிறந்த சமையல் கலை நிபுணர் பிரிவில் இரண்டாம் இடத்தை வென்றார். மேலும் பந்துல ஹரிச்சந்திர மிகச்சிறந்த கலைஞர்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை வென்றார். துமிந்த குமாரசேனவின் புதுமையான கேக் தயாரிப்பிலுள்ள நிபுணத்துவத்துக்கு ‘“Most Outstanding Novelty Cake”என்ற விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

இவ்வாறு Aitken Spence Hotels இன் ஒட்டுமொத்த வெற்றியை, 1 அதிசிறந்த தங்கம், 26 தங்கம், 41 வெள்ளி மற்றும் 70 வெண்கலம் என மொத்தமாக 138 பதக்கங்களை வென்றதன் மூலம் சுவீகரித்துக் கொண்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT