Thursday, July 25, 2024
Home » இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான வரியில் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான வரியில் திருத்தம்

by Rukshy Vinotha
July 13, 2023 2:45 pm 0 comment

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரியில் திருத்தத்கை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால்மாவிற்கு ரூ.100 வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வரித் திருத்தமானது நேற்று (12) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வரித்திருத்தம் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால்மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT