Home » இலங்கையில் 35,000 இற்கு அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கையில் 35,000 இற்கு அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

by Kalky Jeganathan
July 13, 2023 12:11 pm 0 comment

நாட்டில் தற்போது 35,000இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் வட மாகாணத்தில் மாத்திரம் பல காரணிகளால் சுமார் 200 பாடசாலைகள் வரை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் சுமார் 4000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் மூதூர் கல்வி வலயத்திற்கு மாத்திரம் 1300 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் 200 பாடசாலைகள் வரையில் வட மாகாணத்தில் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை, இரம்பைக்குளம் நவராஜா வித்தியாலயம், நவ்வி ஶ்ரீ வாணி வித்தியாலயம், நாம்பன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியன தற்போதும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநர் வட மாகாணத்தில் மாத்திரம் 194 பாடசாலைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x