இலங்கையில் முதல் முறை நடைபெறவுள்ள லங்கா டி10 லீக் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் இந்தத் தொடரை ஆரம்பத்தில் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டபோதும் டிசம்பர் மாதமே பொருத்தமாக இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த லீக் தொடர் முன்னணி சர்வதேச நட்சத்திர வீரர்களை கவர்ந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, இதில் இலங்கையின் முன்னணி சர்வதேச வீரர்களும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தம் ஆறு ஆண்கள் அணிகள் மற்றும் நான்கு பெண்கள் அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அணியிலும் ஆறு வெளிநாட்டு வீரர்களுடன் 16 வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.