Saturday, June 22, 2024
Home » ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்

ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்

by Prashahini
July 12, 2023 2:02 pm 0 comment

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை (15) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமெனவும், யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான ஆசன முற்பதிவுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT