தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால், சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தையும், நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தையும், ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தையும், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தையும் திருத்துவதற்கும், அவற்றோடு தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.
Election spl