Saturday, July 13, 2024
Home » உங்கள் வரிகளை தெளிவாக விளங்கிக்கொண்டு செலுத்துங்கள்!

உங்கள் வரிகளை தெளிவாக விளங்கிக்கொண்டு செலுத்துங்கள்!

- DFCC வங்கியின் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட வருமான வரி கணிப்பானைப் பயன்படுத்தவும்

by Rizwan Segu Mohideen
July 10, 2023 3:52 pm 0 comment

இலங்கையில் அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, தேவைக்கு பதிலளிக்கும் வகையில், தக்க தருணத்தில், பயன்பாட்டுக்கு இலகுவான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சக்திவாய்ந்த தனிப்பட்ட வருமான வரிக் கணிப்பான் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. DFCC வங்கியின் தனிப்பட்ட வருமான வரி கணிப்பானைப் பயன்படுத்தி, வரிக் கணிப்பீட்டு செயல்முறையை எளிதாக்கும் ஆற்றல்மிக்க மற்றும் விரிவான கருவிகளைப் பயன்படுத்தி, 2022 ஏப்ரல் 01 முதல் 2023 மார்ச் 31 வரையிலான உங்கள் வருடாந்த வரிப் பொறுப்பை நீங்கள் உடனடியாக சுயமதிப்பீடு செய்யலாம். ஒரு சில கிளிக்குகளில் அதிகபட்ச துல்லியத்தன்மைக்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள சமீபத்திய தனிநபர் வருமான வரிக் கொள்கைகளுடன் சீரமைக்கப்பட்டு, இக்கணிப்பான் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து DFCC வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் மூலோபாயத்திற்கான துணைத் தலைவர் தினேஷ் ஜெபமணி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்கால நோக்குடனான மற்றும் டிஜிட்டல் அறிவாற்றல் கொண்ட வங்கியாக, தனிநபர் வருமான வரி தொடர்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைத் தங்குதடையின்றித் தெரிந்துகொள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்ட விரும்புகிறோம். எனவே, எமது புதுப்பிக்கப்பட்ட தனிநபர் வருமான வரிக் கணிப்பான், நிதிச் சேவைகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், எமது வாடிக்கையாளர்களின் நிதித்திட்டமிடலை எளிதாக்க உதவுகிறது. உள்ளடக்கிய நிதியியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான எமது உறுதிப்பாட்டிற்கு அமைவாக, எமது தனிப்பட்ட வருமான வரிக் கணிப்பான் இலவசமாகக் கிடைப்பதுடன் மற்றும் சிக்கல்களற்றது. மேலும் DFCC வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல், எமது இணையத்தளத்தின் மூலமாக எவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கியின் தனிப்பட்ட வருமான வரி கணிப்பான், ஆற்றல்வாய்ந்த மற்றும் விரிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது பயனர்கள் தங்கள் வருமான விபரங்களை உள்ளிடவும் மற்றும் அவர்களின் வரிக் கடமைகள் பற்றிய உடனடி மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்ளவும் இடமளிக்கிறது. சமீபத்திய வரி விதிமுறைகள் மற்றும் தேவைப்பாடுகள் திருத்தம் செய்யப்படும்போது, அவற்றுடன் ஒருங்கிணையும் வகையில் சீரமைக்க இது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. தனிநபர்கள் தங்களின் வருமான வரிப் பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகளை உடனடியாக மதிப்பிடுவதற்கும், விளங்கிக்கொள்வதற்கும் இது அனைத்தையும் ஒரே தீர்வாக வழங்குகிறது.

மேலும், குறிப்பிட்ட பிரிவுகளில் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு தகவல் தரும் உதவிக்குறிப்புகள் உள்ளன, இது கணிப்பானைப் பயன்படுத்தவும், விளங்கிக்கொள்ளவும் எளிதாக்குகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில், DFCC வங்கி மற்றும் அதன் சேவைகளைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும் இது இடமளிக்கிறது. கணிப்பீடுகள் முடிந்ததும், பயனர்கள் PDF வடிவத்தில் முடிவுப் பெறுபேறுகளை எளிதாக அச்சிடலாம் அல்லது பதிவிறக்கலாம். ஆகவே விரைவான சான்றாதாரத்திற்கு இடமளிக்கிறது.

உங்கள் வரிக் கடப்பாடுகளை எளிதில் விளங்கிக் கொள்ள, https://www.dfcc.lk/calculators/income-tax-calculator/ ஐப் பார்வையிடுவதன் மூலம் DFCC வங்கியின் வருமான வரி கணிப்பானைப் பார்க்கவும்.

DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT