தங்கத்தின் விலை மேலும் குறைந்தது

தங்கத்தின் விலை நேற்று (08) சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்று முன்தின விலையுடன் ஒப்பிடுகையிலேயே, இவ்விலைக் குறைவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்க விற்பனை நேற்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 5,67,208 ரூபாவாக காணப்பட்டது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்று 1,60,100 ரூபாவாக பதிவாகியது. அதேபோல,

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,46,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,40,100 ரூபாவாகவும் நேற்று பதிவாகியிருந்தது.

 

 


Add new comment

Or log in with...