உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய HMPV வைரஸ் நாட்டில் பரவல்

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய Human Metapneumovirus வைரஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை, இந்த வைரஸ் பரவல் காணப்படவில்லை. இதனால், சுகாதார அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொவிட் 19 நோய் தொடர்பான சுகாதார அமைச்சின் பிரதான இணைப்பாளரான டாக்டர் ஹம்தானி, இந்த HMPV வைரஸ் அமெரிக்க ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இலங்கையிலும் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுள்ளார். கொவிட்19 மற்றும் காய்ச்சல் அறிகுறி யுடனான இந்த வைரஸ் சுவாசத்தின் ஊடாக உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், இதுவரை இலங்கையில் அதன் பரவல் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...