ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்கள் ரூ . 818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றைய தினம் 29 மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 23 அன்று சிங்கப்பூருக்கு சென்ற முதல்வர் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானிற்குச் சென்றுள்ளார்.

அங்கு நேற்றைய தினம் 29 டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன்( JETRO) இணைந்து நடாத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு  ஜப்பான் நிறுவனங்களை தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து  கொள்வதற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

 


Add new comment

Or log in with...