100 சர்வதேச கோல்களை பெற்று மெஸ்ஸி சாதனை

ஆர்ஜன்டீன அணி வெற்றியீட்டிய குராக்கோ அணிக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் ஏழாவது சர்வதேச ஹட்ரிக் கோலை புகுத்திய லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோலை பெற்றார்.

ஆர்ஜன்டீனாவில் நேற்று (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் மெஸ்ஸி 20, 33, 37 ஆவது நிமிடங்களில் கோல் புகுத்தியதோடு, இதன்மூலம் ஆர்ஜன்டீன அணி 7–0 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.

இந்த கோல்களுடன் தற்போது சர்வதேச போட்டிகளில் 102 கோல்களைப் பெற்றிருக்கும் மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்காக அதிக கோல்களை பெற்றவராக சாதனை படைத்திருப்பதோடு, போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (122) மற்றும் ஈரானின் அலி டாயி (109) ஆகியோரை தொடர்ந்து அதிக சர்வதேச கோல்களை பெற்றவர் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


Add new comment

Or log in with...