Wednesday, March 29, 2023 - 6:12pm
இலங்கை கபடி சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட நிந்தவூர் மதினா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தை வென்றுள்ளது.
பண்டுவஸ்ணுவர ஹெட்டிபோல பொது மைதானத்தில் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேகாலை மாவட்ட அணியை எதிர்கொண்ட மதினா கழகம் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்
Add new comment