- நீதிமன்றத்தினால் உத்தரவு
10 கோடி அமெரிக்கன் டொலரை பிரமிட் முறையில் மோசடி செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தனியார் நிறுவனமொன்றின் (ONMAX DT) ஏழு பணிப்பாளர்களுக்கும் வெளிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதுதொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் மஜிஸ்திரேட் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கிணங்க, குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சம்பத் சந்தரூவன், அத்துல, கயாசான் அபேரத்ன, மதுரங்க பிரசன்ன, சாரங்க ரந்திக்க, தனஞ்செய ஜயான் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களே தடைசெய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, சந்தேகநபர்களான பணிப்பாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் 57 வைப்புக் கணக்குகளையும் இடைநிறுத்துமாறும் மஜிஸ்திரேட் நீதவான் சம்பந்தப்பட்ட வங்கிகளின் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு பணிப்பாளரின் முறைப்பாட்டிற்கிணங்க, நிதி குற்றம் தொடர்பான விசாரணைப் பிரிவு பீ அறிக்ைகயை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளதையடுத்து நீதவான் நேற்று மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment