கற்றல் செயன்முறையில் அளவீடும் மதிப்பீடும்

கற்றல்- மற்றும் கற்பித்தலின் இறுதி விளைவை அறிந்து கொள்ள (கற்றல் இலக்கு, நோக்கம், தேர்ச்சிகளை மாணவர் எய்தியுள்ளனரா என்பதனை உறுதிசெய்ய) அளவீடு, மதிப்பீடு அவசியமாகின்றன.

அக்கால கற்பித்தலில் அளவிடுதல், மதிப்பிடுதல் வாய்மொழி சார்ந்ததாக இருந்தது. அவற்றில் கிரகித்தல், மனப்பாடம் செய்தல், அதனை ஒப்பிடுதல், தர்க்கம் செய்யும் திறன், வீரம் வெளிப்படுத்தல் என்பனவே இடம்பெற்றிருந்தன. சமூக வளர்ச்சியோடு படிப்படியாக ஏற்பட்ட கல்வி, பொருளாதார, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அளவீடும், மதிப்பீடும் பல பரிமாணங்களை பெற்று கல்வியியலில் முக்கியமானறாக இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சி கல்வியில் புதிய விருப்புகளையும், பரிணாமத்தையும் ஏற்படுத்தியது. அது ப​ைழமையான மரபு ரீதியான கணிப்பிடல், மதிப்பிடலில் இருந்து மாணவர்களின் ஆற்றல்களையும் , திறன்களையும் கண்டறிந்து அவர்களை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தது. இதனால் கலைத்திட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த உதவியது.

இக்கலைத்திட்ட மாற்றத்தில் கணிப்பீட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பூல் காங்கற்கே, ஜோன் அமொஸ் கொமினியஸ் என்பவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இதனைத் தொடர்ந்து கணிப்பீட்டில் முக்கிய பங்காற்றிய கல்வியலாளர் பெஞ்கமின் புளும் ஆவார். இவருடன் இணைந்து கிரத்வோல் என்ற மற்றொரு கல்வியலாளர் 'அறிக்கை ஆட்சி' என்னும் நூலை வெளியிட்டார். கல்வி உளவியலில், கணிப்பீடு பற்றி கல்வியியலாளர்கள் முக்கியதுவம் வழங்கி வந்தனர். இதன் விளைவாக 1971 இல் சுவீடனில் நிகழ்ந்த மதிப்பீடு தொடர்பான யுனெஸ்கோவின் கருத்தரங்கில் பங்கு பற்றிய நாடுகள் அனைத்தும் கல்வியில் மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டன. இதன் விளைவாக காலத்திற்கு காலம் ஏற்பட்ட இடம்பெற்ற மதிப்பிடல், அளவிடல் ,கணிப்பிடல் தொடர்பாக மாற்றங்கள் இலங்கை கல்வி முறைகளிலும் இடம்பெற்றமையை அவதானிக்கலாம்.

மதிப்பீடு என்பதனை அவதானிப்போமானால் மதிப்பீடு என்பது எந்ததொரு செயலிலும் இன்றியமையாததாக இடம்பெறுவதாகும். ஒரு செயலின் வெற்றி தோல்வியினை மீளாய்வு செய்து கொள்ள மதிப்பீடு உதவும். மதிப்பீடு என்பதனை பின்வருமாறு குறிப்பிடலாம். 'ஒரு செயற்பாட்டின் வெற்றியை தீர்மானிக்கும் முறையான செயலொழுங்கு'. இம்மதிப்பீட்டை கல்வி கருமங்களுடன் பயன்படுத்தும் போது கல்வி மதிப்பீடு எனப்படும். கல்வி மதிப்பீடு என்பதனை எண்களில் தரப்பட்ட தகவல்களை பயன்படுத்தி மாணவரது விருத்தியை பகுப்பாய்வு செய்தலை குறிக்கும்.

தற்போது கல்வியில் கற்றல்- கற்பித்தல் செயன்முறையில் மதிப்பீட்டு செயன்முறையிலுள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்து மாணவருக்கு சாதகமான நிலைமையை கொண்டு வர மதிப்பிட்டில் கணிப்பீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கணிப்பீடு என்பது கற்றல்- கற்பித்தல் செயன்முறையின் போதே இடம்பெறுவதாகும்.

மாணவர்களின் நுண்மதியை அளப்பதற்கு நுண்மதிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நுண்மதி சோதனைகள் முதன்முதலில் 1904 அல்பிரைட் பீனே அவர்களாலேயே தயாரிக்கப்பட்டன.

தற்காலத்தில் பன்முக நுண்மதி சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நுண்மத் சோதனைகள் இன்று உளகளாவிய ரீதியில் பலதுறைகளிலும் பயன்படுத்தப்படுசதை அவதானிக்கலாம். நுண்மதி சோதனைகள் இன்று பல்துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கல்வி,இராணுவம், பொதுத்துறைகளிலும் மாணவர்கள் விஷேட திறனுடையவர்களை இணம்காணல், ஆட்சேர்ப்பு, பொருத்தமான நபர்களை தெரிவு செய்ய, மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல், நலிந்தவர்களை இனங்காணல் போன்றவற்றுக்கு இச்சோதனைகள் பயனுள்ளதாக அமைகின்றன.

பொது உளச்சார்பு சோதனை என்பது ஒருவரிடத்தே காணப்படும் உள்ளார்ந்த இயலுமைகளை கண்டறிவதற்கும் அளப்பதற்கும் பயன்படும் சோதனையாகும். குறித்த துறைகளை வழங்கப்படும் கல்வி பயிற்சியினூடாக ஒருவர் பெரும் ஆற்றலை கண்டறியும் சோதனையாகவும் இது அமைகின்றது. இச்சோதனையின் முக்கிய இயல்பு ஒருவரது எதிர்கால ஆற்றல்கள் தொடர்பாக தற்காலத்தில் செய்யப்படும் எதிர்வுகூறலாகும்.

இலங்கையில் பேராசிரியர் தசாநாயக்கா அவர்களால் 1966 ல் இவ்வகை உளச்சார்பு சோதனையொன்று (உயர்தர மாணவர்கள்) அறிமுகம் செய்யப்பட்டது. தர்கிப்புத்திறன், ஒப்புதைத்திறன், வகைப்படுத்தும் திறன் ,மொழித்திறன் எண்சார்ந்த திறன் போன்ற திறன்களை அளக்க இவ்வகை சோதனை பயன்படுகின்றது.

இந்தவகையில் தற்போதைய கல்விச் செயன்முறையில் அளவீடும் மதிப்பீடும் முக்கிய இடத்தை வகிப்பதனை நாம் அவதானிக்கலாம்.

செல்லையா சாமிளா...

(கொட்டகலை)


Add new comment

Or log in with...