இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதன்படி, இலங்கை அணிக்கு போட்டிக்கான பணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான குற்றத்தை இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஏற்றுக்கொண்டுள்ளதால், இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்படாது எனவும் ICC தெரிவித்துள்ளது.
3 போட்டிகளைக் கொண்ட குறித்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றையதினம் (28) இடம்பெறவிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முதல் போட்டியை வென்ற நியூஸிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment