நியூசிலாந்து ரி20 குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ரி20 தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு ஆண்டுகளின் பின் ரி20 சர்வதேச போட்டிகளுக்கு திரும்பும் டொம் லதம் அணித் தலைவராக செயற்படவுள்ளார். சாட் பொவஸ் மற்றும் ஹென்ரி ஷிப்லி இலங்கை தொடரில் தனது கன்னி போட்டியில் ஆட வாய்ப்பு உள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் போட்டிகள் ஏப்ரல் 2, 5 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

நியூசிலாந்து குழாம்: டொம் லதம் (தலைவர், வி.கா), சாட் பொவஸ், மார்க் சப்மன், மட் ஹென்ரி, பென் லிஸ்டர், அடம் மில்னே, டரில் மிட்சல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவிந்திரா, டிம் செய்பேர்ட், ஹென்ரி ஷிப்லி, இஷ் சோதி, வில் யங்.


Add new comment

Or log in with...