Dandex பொடுகு நீக்கி மற்றும் உச்சந்தலை பராமரிப்பு தீர்வுகளின் புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் அறிமுகம்

இலங்கையில் முன்னணியில் திகழும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG) தயாரிப்பு நிறுவனமான  Hemas Consumer Brands, அதன் முன்னணி பொடுகு எதிர்ப்பு பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex ஷாம்புவை அண்மையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. Dandex இலங்கையில் 30 வருடங்களாக சந்தையில் நீடித்து வருவதோடு, முதல் முறை பயன்படுத்தும் போதே பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் திறன் கொண்ட நன்கு அறியப்பட்ட பொடுகு எதிர்ப்பு நிபுணராக கருதப்படுகின்றது. இது நாடு முழுவதும் பரவலாகக் கிடைப்பதோடு, பல்வேறு பெறுமதி கொண்ட பொதிகளில் நுகர்வோரைச் சென்றடைகிறது. மேலும், இது பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆரோக்கியமான உச்சந்தலையைப் பேணுவதற்குமாக வடிவமைக்கப்பட்ட, ஆண் பெண் இருபாலருக்குமான தயாரிப்பாகும்.

Dandex anti-dandruff ஷாம்பு சந்தைக்கு முதன் முறையாக வெளியிடப்பட்டதிலிருந்து, பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கும் அதனை தடுப்பதற்கும் மாத்திரமன்றி, குறிப்பாக உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு போசாக்களிப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும், ஈரப்பதனுடன் பேணுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட Dandex ஷாம்பு வகைகள், Cooling + Relief, Deep Clean + Nourish, Hair Fall Control ஆகிய 3 தனித்துவமான வகைகளில் கிடைக்கிறது. இந்த மூன்று வகைகளும் குறிப்பாக அந்தந்த நபர்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையில், பல்வேறு வகைப்பட்ட நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த தயாரிப்பு வகைகள் ஒவ்வொன்றும் Climbazole எனப்படும் செயற்பாட்டு மூலப்பொருளைக் கொண்டுள்ளது. இது Malassezia வினை ஏற்படுத்தும் பொடுகை நேரடியாக குறிவைப்பதோடு, முதல் பயன்பாட்டில் இருந்தே பொடுகை நீக்குமென மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Cooling + Relief வகையானது, பொடுகினால் ஏற்படும் அரிப்பு மற்றும் அசௌகரியத்தைக் கட்டுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் 100% இயற்கையான புதினா சாற்றைக் கொண்டுள்ளது. இதிலுள்ள கற்றாழை, கூந்தலை நிலைநிறுத்தி உச்சந்தலையையும் கூந்தலையும் ஈரப்பதனுடன் பேணுகிறது. Deep Clean + Nourish வகையானது, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, எலுமிச்சை மற்றும் விற்றமின் E ஆகியவற்றின் இயற்கையான சாறுகளைக் கொண்டுள்ளது. புத்துணர்ச்சியூட்டும் உணர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு ஆழமான தூய்மையாக்கலை மேற்கொள்கிறது. இதன் ஒவ்வொரு முறை பயன்பாட்டின் பின்னரும் கூந்தலை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. அத்துடன் ஆரோக்கியமான கூந்தலுக்கான அதிக போசாக்கையும் அது சேர்க்கிறது.

பொடுகுத் தொல்லையால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுப்பதற்காக, Hair Fall Control வகையானது, கூந்தலுக்கு போசாக்கு அளித்து, அதனை வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிக ஈரப்பதனைப் பேணுவதற்காகவும், கூந்தலை வலுவூட்டி, கூந்தலின் வேரிலிருந்து முடியை வலுவாகவும், முடி உதிர்தலுக்கு ஆளாவதை குறைப்பதற்காகவும், கெரட்டின் மற்றும் பாதாம் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.

Hemas Consumer Brands இனால் 1992 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, Dandex சந்தையிலுள்ள முன்னணி பொடுகு எதிர்ப்பு மற்றும் உச்சந்தலை பராமரிப்பு தீர்வாக விளங்கி வருகிறது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட Dandex ஆனது, குறிப்பாக பொடுகை எதிர்த்துப் போராடுவதற்காக மாத்திரமன்றி அதன் பயனர்களுக்கு தங்களது தோளில் பொடுகு உள்ளதா என பயப்பட தேவையில்லாத புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையான மனநிலையை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதற்காக, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரே நோக்கத்துடன் Dandex உருவாக்கப்பட்டது. இவ்விடயம் வர்த்தகநாமத்தின் புதிய தொடர்பாடல் மற்றும் பொதியிடலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் Dandex இன் ஒவ்வொரு வகையினதும் மருத்துவ அம்சங்களையும் மூலப்பொருட்களையும் தெளிவாகப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...