- அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், அதற்கான பதிலை இன்று (28) நிதி அமைச்சராகிய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடு மற்றும் அண்மையில் இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை நாட்களில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பது தொடர்பான விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, குறித்த பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment