இலங்கை அல்லது ஆப்கானிஸ்தானுடன் வரும் ஜூன் மாதத்தில் குறிகிய கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆலோசித்து வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிக்குப் பின்னர் ஜூன் மாதத்தின் இரண்டாவது பாதியில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றை நடத்தவே இந்தியா திட்டமிட்டுள்ளது.
எனினும் இவ்வாறான போட்டித் தொடர் ஒன்று இந்தியாவின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்திற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட வேண்டி உள்ளது. இந்திய அணி ஜூலை முதல் வாரத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கவுள்ளது.
இலங்கை அணிக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருப்பதோடு அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் எந்தப் போட்டி அட்டவணையும் இல்லை. வரும் ஜூலை மாதத்திலேயே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவுடன் அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடர் ஒன்றில் ஆடுவது அதிக அனுபவத்தை தருவதாக அமையும்.
Add new comment