சிரியா–சவூதி இடையே தூதரக செயற்பாடுகள்

சவூதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன.

பதினொரு ஆண்டுகளாக இரு நாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது.

நோன்பு மாதத்துக்குப் பின் தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளதாய் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இரு நாடுகளின் துணைத் தூதரகச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதை சவூதி அரேபிய அரசாங்கத் தொலைகாட்சி உறுதிப்படுத்தியது.

சவூதி அரேபியாவும் ஈரானும் அவற்றின் உறவைச் சீர்ப்படுத்தும் முக்கிய உடன்பாட்டில் 2 வாரங்களுக்கு முன்னர் கையெழுத்திட்டன. பரந்த அரபு வட்டாரத்துக்குச் சிரியா மீண்டும் திரும்பத் தூதரகச் செயல்பாடுகள் வழியமைத்துத்தரும்.

உள்நாட்டுப் போருக்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஸாத் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து 2011ஆம் ஆண்டு அரபு லீக், சிரியாவைத் தற்காலிகமாக விலக்கி வைத்தது.


Add new comment

Or log in with...