இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொவிட் தொற்று!

இந்தியாவில் நேற்றுக்காலை வரையான 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதன்படி இந்தியாவில் கொரோனா பரவல் வீதம் 0.7% இ-ல் இருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளது. டெல்லியிலேயே கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் நேற்றுக்காலை வரையான 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் வீதம் 5.83% ஆக உள்ளது.

இந்தியாவில் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகின்றது. இதேவேளை இந்தியாவில் நேற்று காலை 8 மணிவரையான 24 மணி நேரத்தில் 435 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...