தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 31ஆவது தலைவராக பசிந்து குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடமிருந்து இன்றையதினம் (22) தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
தேசிய இளைஞர் சேவை கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவர் அதற்கு நியமிக்கப்பட்ட மிக இளம் தலைவராவார்.
கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் உட்கட்டமைப்புப் பொறியியலில் BEng (Hons) பட்டமும், De Montfort பல்கலைக்கழகத்தில் (UK) அளவியல் மற்றும் கட்டுமானப் பிரிவில் BSc (Hons) பட்டமும் அவர் பெற்றுள்ளார்.
அவர் தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டப்படிப்பையும், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையயும் தொடர்ந்து வருகிறார்.
இந்நிகழ்வில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் இளைஞர் விவகார மற்றும் நிலையான அபிவிருத்தி பணிப்பாளர் ரந்துல அபேதீர, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.மஹேசன், அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் வடுகே, முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டிரான் டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Add new comment