கல்முனை லெஜன்ட்ஸ் வெற்றி

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான அமரத்துவமடைந்த சீனிதம்பி பேரின்பமின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட டி10 கிரிக்கெட் தொடரில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்சஸ் அணியை வீழ்த்தி கல்முனை லெஜன்ட்ஸ் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

விபுலானந்தா மைதானத்தில் கடந்த ஞாயிறன்று (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்சஸ் அணி 10 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாடிய லெஜன்ட்ஸ் அணி 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.எல்.எம். அஸீம் தெரிவானார்.

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...