மாலைதீவு மற்றும் பசுபிக் தீவுகளான டொங்கா மற்றும் கிரிபட்டி ஆகியவற்றில் புதிதாகத் தூதரகங்களை திறப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவி வெளியுறவு செயலாளர் டேனியல் கிரிடென் பிரிங்க் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கு மேற்கு மைய சிந்தனைக் குழுமத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்து–பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா அதன் ஒட்டுமொத்த இராஜதந்திர மூலோபாயத்தின் மையமாகக் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சொலமன் தீவுகளில் புதிய தூதரகத்தைத் திறந்து வைத்த பின், பசுபிக் தீவு நாடுகளில் எமது இராஜதந்திர செயற்பாடுகளை விரிவாக முன்னெடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
Add new comment