சபா இல்லம் வெற்றி

அட்டாளைச்சேனை சம்பு நகர் அக்/ அல்–மினா வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) மாலை நடைபெற்ற இறுதி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மத்துல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் சாபிர், பிரதான அனுசரணையாளர் அனீஸ் மோல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ. அனீஸ் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சபா, மர்வா, மினா இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாமிடத்தினை மர்வா இல்லம் வென்றது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...