அமெரிக்க ரி20 தொடரில் இலங்கையின் 4 வீரர்கள்

அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ரி20 தொடரில் வொசிங்டன் பிரீடம் அணிக்கு ஆட வனிந்து ஹசரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தவிர, செஹான் ஜயசூரிய, அஞ்சலோ பெரேரா ஆகியோர் சீட்ல் ஓர்கஸ் அணியில் இடம்பிடித்துள்ளதுடன், லஹிரு மிலந்த, டீம் டெக்சஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு அணிகளை இந்திய பிரீமியர் லீக் உரிமையாளர்கள் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...