- தேர்தலை நடத்த உதவுமாறு சபாநாயகருக்கும் கடிதம்
- தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி எடுத்த தீர்மானங்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இன்று (24) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கூட்டத்தில் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிவித்தலிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய தேர்தல் திகதி எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படுமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், அத்துடன் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியலமைப்புக்கமைய மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றுடன், தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை, திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதனை வலியுறுத்துவதில் தலையிடுமாறு சபாநாயகருக்கு எழுத்து மூல கோரிக்கையை சமர்ப்பிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
MR_2023_39_S.pdf (456.64 KB)
Add new comment