- காலி, ஹிக்கடுவை சென்ற ஜனாதிபதி வர்த்தகர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்
- முதன் முறை ஜனாதிபதியொருவர் தங்களை சந்தித்ததா தெரிவிப்பு
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் "சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவை சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர தின விழா பெருமையுடன் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்ததாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ள செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்வது அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவை நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்தார். அங்கு ஜனாதிபதிக்கு வர்த்தகர்களின் அமோக வரவேற்பும் கிடைத்தது.
ஜனாதிபதியொருவர் தமது வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்து, பிரச்சினைகளை ஆராய்ந்தது இதுவே முதல் தடவை என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஹிக்கடுவை நகரில் கூடியிருந்த மக்களின் விபரங்களையும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்! ஜனாதிபதி
ஹிக்கடுவ நகருக்குச் சென்ற ஜனாதிபதி வர்த்தகர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்!
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் "சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இந்நாட்டில் சுற்றுலாத்துறையின் மையமாக விளங்கும் இப்பிரதேசத்தின் சுற்றுலாப் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்காக இன்று நாம் ஹிக்கடுவைக்கு வருகை தந்தோம். சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
நாம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை எட்ட முடிந்தது. அவர்கள் கூறிய 15 விடயங்களை நாங்கள் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளோம். இப்போது எமக்கு உதவிகளை வழங்கும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் எமக்கு கடன் வழங்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026ஆம் ஆண்டுக்குள், அரச வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியில் 15 சதவீதமாக உயர்த்துவதே எங்களின் நோக்கம். பின்னர் நீங்கள் அந்நியச் செலாவணியை முகாமை செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நீண்ட கால, நடுத்தர மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நமது ஏற்றுமதி வருமானம் நமது இறக்குமதிச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம் தேவை. இறக்குமதிச் செலவை ஈடுசெய்வதற்கு மட்டும் அல்லாமல் ஏற்றுமதி வருமானத்தை மிகையாக மாற்றும் திட்டங்களைச் செயல்படுத்த எதிர்பார்க்கின்றேன்.
இல்லை என்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தக்கூடிய சில முதலீடுகள் உள்ளன. அவற்றிலிருந்து பிரதிபல்களைப் பெறுவதற்கு சுமார் பத்து ஆண்டுகள் ஆகும். மேலும் மூன்று ஆண்டுகளில் பலன்களைப் பெறக்கூடிய முதலீடுகள் உள்ளன. அத்தகைய நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீடுகளை நாம் கண்டறிந்துள்ளோம். சுற்றுலாவை குறுகிய கால முதலீடாகக் கருதலாம். சுற்றுலாத் துறையின் மூலம் அன்னியச் செலாவணியை எப்படி அதிகரிக்க முடியும் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
சமீபகாலமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். அதனால், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருந்த சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். மற்றவர்களின் வாகனங்கள் குத்தகை நிறுவனங்களினால் மீள எடுக்கப்பட்டன.
இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த இரண்டு உத்திகளைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வருடமும் 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் வேலைத்திட்டத்தை தயாரிப்பதும் அவற்றில் ஒன்று. ஒரு நாளைக்கு 500 டொலர் செலவழிக்கக் கூடிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் இரண்டாவது உத்தியாகும். 500 டொலர்களுக்கு மேல் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளோம். குழுவின் அறிக்கை கிடைத்ததும், அவற்றை விரைவில் அமுல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
1977 இல், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை விட அதிகமான மக்கள் மாலைதீவுக்குச் சென்றனர். ஏனெனில் அந்த நாட்டில் தென்னை மரங்கள் வெட்டி, அறைகள் செய்து குறைந்த விலையில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. 1977 இல் நாங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு 25 டொலருக்கு ஒரு அறையை வழங்கினோம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 டொலர்கள் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை இந்த நாட்டிற்கு எவ்வாறு கொண்டு வருவது என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். மாலைத்தீவு, தங்கள் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஐரோப்பா தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தனர்.
ஆனால் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாங்கள் அத்தகைய திட்டத்தை பின்பற்றவில்லை. இம்முறை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இவ்வாறான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மற்ற விடயம் என்னவென்றால், சுற்றுலாத் துறையில் உள்ள நீங்கள் இந்த மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குறைந்தது ஏழு நாட்களுக்கு தங்க வைத்திருக்க வேண்டும்.
சிங்கப்பூர், தற்போது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கூடுதலாக மூன்று மணி நேரம் தங்க வைப்பது எவ்வாறு என்பது குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, ஒரு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறைந்தது ஏழு நாட்களுக்கு தங்க வைக்கும் திட்டத்திற்கு செல்ல வேண்டும்.
பிரதமர் லீ குவான் யூ ஒருமுறை என்னிடம் கூறினார், "சுற்றுலா என்பது பாக்கெட் உணவை எடுப்பது போன்றது." நமது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நமது பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.
நம் நாடு இன்றும் டிசம்பர் மாத்த்திற்குத் தான் சுற்றுலாத் தளமாக உலகப் புகழ் பெற்றுள்ளது. ஓகஸ்ட் மாதத்திறகான சுற்றுலாத் தலமாக ஏன் இலங்கையை மாற்ற முடியாது? இலங்கையை வருடம் முழுவதற்குமான சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும். அதற்கு உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
மேலும் இலங்கை பற்றிய நல்ல பிரச்சாரம் உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கு சில நிமிட வீடியோ கிளிப்களை தொகுத்து விளம்பரம் செய்வது போன்ற நிகழ்ச்சிகளை செயல்படுத்தலாம். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடினோம்.
சட்டம் ஒழுங்கு சீராக இல்லாத நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த போராட்டங்களை அடுத்து சுற்றுலா பயணிகள் இலங்கையில் இருந்து விலகி இருந்தனர். அவர்களை மீண்டும் எமது நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளதை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். இவை அனைத்தும் நடைபெற சுற்றுலாத்துறையில் உங்கள் பங்களிப்பு அவசியம்.
வர்த்தகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி மேலும் இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி,
ஜனாதிபதி அவர்களே, சுற்றுலாத்துறையின் புகலிடமாக விளங்கும் ஹிக்கடுவ கடற்கரை தற்போது அழிந்து வருகின்றது. கடற்கரை மணலை சில கும்பல் விற்பனை செய்து வருகிறது. இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் கவனம் செலுத்தி தீர்வை வழங்குங்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மணல் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். மீன்பிடித் துறைமுகங்கள் மணல் விற்பதற்கு அன்றி , மீன்களை விற்கவே உள்ளன.
கேள்வி
காலி-கொழும்பு பிரதான வீதியில் ஹிக்கடுவையிலிருந்து காலி வரை செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டால், சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரம் மேலும் வலுவடைந்து சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எனவே பேருந்துகள் மற்றும் லொரிகளை மாற்றுப் பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுப்போம். அதை பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.
கேள்வி
ஜனாதிபதி அவர்களே, சுற்றுலாப் பயணிகளுக்காக கடற்கரையில் ஏதேனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டால், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் சட்டத்தை அமுல்படுத்துகின்றது. நிலைமையை ஆராய்ந்து சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இந்தக் கேள்வி என்னிடம் கேட்கக் கூடாது. இவற்றை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அரச அதிகாரிகள் உள்ளனர். நான் மீண்டும் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு வருவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் தலையிட்டு செயற்படுத்த வேண்டும்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெனாண்டோ,
எமது நாட்டில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் சவாலை நாம் ஏற்றுக்கொண்ட நேரத்தில், இந்த நாட்டில் இருந்த கடைசி வெளிநாட்டவரும் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். மேலும், விமான நிலையம் மூடப்பட்டது. ஆனால் அந்த நிலையை மாற்றி கடந்த ஆறு மாதங்களில் ஏழு இலட்சத்து இருபத்தி ஏழாயிரம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க முடிந்தது.
மேலும், இந்த ஆண்டின் முதல் மாதத்தில், 100,000இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நம் நாட்டிற்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை அழைத்து வர, நம் நாட்டில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்தாலோசித்து புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு முன்வைத்துள்ளது.
நாம் நாட்டை பொறுப்பேற்கும் நேரத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் , ஒரே ஒரு விமான சேவையை மட்டுமே இயக்கியது. இன்று அதை நான்கு விமானங்களாக அதிகரிக்க முடிந்துள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த, விமான சேவைக்கான ஆசனங்களை விற்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நம் நாட்டிற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மற்ற விடயம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வேடிக்கை பார்க்க வருகிறார்கள். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நேரத்தை நள்ளிரவு 01 மணி வரை நீட்டித்தால், அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும்.
பெருந்தோட்டங்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண
2010இற்குப் பிறகு சுற்றுலாத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் கொரோனா தொற்றுநோயால், சுற்றுலாத் துறை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சரிந்தது. 2018ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் 04 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்தது.
அந்த நிலைமையை மீட்டெடுக்க ஜனாதிபதி தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார். ஹிக்கடுவ பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். நாம் மீண்டும் அதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்ற திட்டமிட வேண்டும்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவ நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்தார். அங்கு ஜனாதிபதிக்கு வர்த்தகர்களின் அமோக வரவேற்பும் கிடைத்தது.
ஜனாதிபதியொருவர் தமது வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்து, பிரச்சினைகளை ஆராய்ந்தது இதுவே முதல் தடவை என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ நகரில் கூடியிருந்த மக்களின் விபரங்களையும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
Add new comment