மாத்தறை கடலில் காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு

மாத்தறை, வெல்லமடம கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன 3 பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) முற்பகல் மாணவர்கள் குழுவொன்று கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில், அதில் 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கடலில் நீராடச் சென்றுள்ளதாக பொலிசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய 2 மாணவர்களை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


Add new comment

Or log in with...