நுவரெலியா மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் பிரசாரம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரிட்வெல்,  கிர்கோஸ்வால்ட், திலரி, பொகவந்தலாவ, சப்பல்டன், இன்ஜெஸ்ட்ரி, மாணிக்கவத்தை உள்ளிட்ட பல்வேறு தோட்டங்களில் செந்தில் தொண்டமான் மக்களை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளில் இ.தொ.கா போசகர் சிவராஜா, பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பிலிப் குமார், சச்சிதானந்தன், ஜீவந்தராஜா மற்றும் இத்தோட்டங்களில் உள்ள இதொகாவின் தோட்ட தலைவர்கள், தலைவிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தமது முழுமையான எதிர்வரும் தேர்தலில் வழங்குவதாக தோட்ட மக்கள் இதன்போது உறுதியளித்தனர்.


Add new comment

Or log in with...