ஓய்வு பெற்றார் ஆரோன் பின்ச்

அவுஸ்திரேலிய ரி20 அணித் தலைவர் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 36 வயது பின்ச் கடந்த செப்டெம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் அவுஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட், 146 ஒருநாள் மற்றும் 103 ரி20 போட்டிகளில் ஆடி இருப்பதோடு 2021 ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற ஆஸி. அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

“அவுஸ்திரேலியாவுக்காக ஆடியது மிகப்பெரிய கெளரவம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஷ் லீக் உட்பட உள்ளுர் போட்டிகளில் அவர் தொடர்ந்து ஆடவுள்ளார்.


Add new comment

Or log in with...