முருகபூபதி சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஜீவநதி

யாழ். அல்வாயிலிருந்து கடந்த பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் 'ஜீவநதி' கலை, இலக்கிய மாத இதழானது 2023 தை மாத வெளியீடாக, அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் , படைப்பிலக்கிய முயற்சிகளையும் பதிவுசெய்யும் வகையில் சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல சிறப்பிதழ்களையும் கலை, இலக்கிய ஆளுமைகள் தொடர்பான சிறப்பிதழ்களையும் வரவாக்கியிருக்கும் ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், முன்னர் அவுஸ்திரேலியச் சிறப்பிதழையும் வெளியிட்டிருப்பவராவார்.

இவ்வருடம் தைமாதம் வெளியாகியிருக்கும் இலக்கிய ஆளுமை முருகபூபதி சிறப்பிதழில், கிறிஸ்ரி நல்லரெத்தினம், தாமரைச்செல்வி, காரைக்கவி கந்தையா பத்மநாதன், ஜெயபிரசாந்தி ஜெயபாலகேரம், கே. எம். செல்வதாஸ், ஐங்கரன் விக்னேஸ்வரா, ருஸ்னா நவாஸ், சிவ ஆரூரன், பேராசிரியர் செ. யோகராசா, புலோலியூர் வேல் நந்தகுமார், அஷ்வினி வையந்தி, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வ. ந. கிரிதரன், த. கலாமணி, மகேந்திரராஜா பிரவீணன், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஆகியோர், முருகபூபதி எழுதிய நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவங்களுடன், முருகபூபதியின் தன்னார்வத் தொண்டு பணிகள் குறித்தும் எழுதியுள்ளனர். முருகபூபதியின் வாழ்க்கைக் குறிப்புகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

பிரதிகளுக்கு : ஜீவநதி, கலைஅகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இலங்கை என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்: [email protected]


Add new comment

Or log in with...