கடும் மழை காரணமாக பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால் உடனடியாக அதுதொடர்பில் கமத்தொழில் சேவை மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை விவசாய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழை காரணமாக சில மாவட்டங்களில் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து வருவதாகவும் அதுதொடர்பில் கவனம் செலுத்தி பாதிப்புகளுக்கான நட்டஈடு தொடர்பில் அறிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கிணங்கவே அந்த காப்புறுதி சபை விவசாயிகளுக்கு மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது.
பயிர்ச்செய்கைகள் பாதிப்புக்கான நட்டஈடாக ஒரு ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி காப்புறுதி சபையானது அரசாங்கத்தின் நடுநிலை கண்காணிப்பின் கீழ் நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை
Add new comment