தமிழ் கட்சிகளை பிரித்தாளும் முயற்சியில் இந்தியா ஈடுபடவில்லை

ஒற்றுமையுடன் இருப்பதனையே விரும்புகிறது

இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் ஒற்று மையுடன் இருப்பதையே இந்தியா விரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்றவர் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஒருமித்தே சந்தித்திருந்தார் எனவும் மாவை குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை முன்வைத்துவரும் நிலையில் தான் ஜெய்சங்கரும் அக்கட்சிகளின் தலைவர்களை ஒருமித்து சந்தித்துள்ளார்.

அதிகாரங்கள் பகிரப்பட்டு, அவை மீள எடுக்கப்படாத வகையில், இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பை போன்று இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கட்சிகளின் கோரிக்கையாக இருந்துள்ளது. அவ்வாறான பின்னணியில் இந்தியா பிரித்து செயற்படுகின்றது என்று கூறுவது பொருத்தமற்ற ஒன்றாகும். அபத்தமானது எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...