இரு வாரங்களுக்குள் தகவல் தருமாறு கோரிக்கை
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட எம்.பிக்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விபரங்களைப் பெற்றுத்தராவிட்டால் அதுதொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி அதுதொடர்பில் தெரிவிக்கையில், மேற்படி தகவல்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டிலும் வினவப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விபரங்களை பெற்றுக்ெகாடுப்பது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் வெளியிடுவதாக அந்த ஆணைக்குழுவினால் குடிவரவு குடியகல்வு தகவல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அந்த அதிகாரி வழங்கும் பதிலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளமுடியுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment