போதிக்குள் வெடிமருந்துகளுடன் பிரவேசிக்க முயன்றவர் கைது

அநுராதபுரம் புனித ஜயஸ்ரீ மா

அநுராதபுரம் புனித ஜயஸ்ரீமா போதியின் வடக்கு நுழைவாயிலூடாக வெடிமருந்துகள், சேவா நூலுடன் உட்புகுந்த நபரொருவரை கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை ஜயஸ்ரீமா போதியின் வடக்கு நுழைவாயில் பகுதியில்

இடம்பெற்றது. சந்தேக நபருடைய பயணப் பையை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.இதன்போது 32 கிராமிற்கும் அதிகமான வெடிமருந்தையும், சேவா நூல் ஒன்றினையும் அநுராதபுரம் உடமலுவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய காலி பிட்டிகல தல்கஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வெடிமருந்தினை எடுத்து வந்த நோக்கம்

குறித்து அறிந்துகொள்ள,குறித்த சந்தேக நபர்,

அநுராதபுரம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(அநுராதபுரம் தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...