பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரப், காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு 79 வயதாகும்.

நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் வைத்து இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் Amyloidosis (அமிலொய்டோசிஸ்) எனும் உடல் அங்கங்களுக்கு சேதம் விளைவிக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் Amyloid (அமிலொய்ட்) எனப்படும் வழக்கத்திற்கு மாறான புரதத்தின் உருவாக்கத்தால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும்.

பர்வேஸ் முஷாரப் 1943 ஓகஸ்ட் 11 இல் டெல்லியில் பிறந்தார்.

1947 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் பிரிவைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பாகிஸ்தானுக்குச் சென்றனர்.

அவர் 1964 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த  பர்வேஸ் முஷாரப் குவெட்டாவில் உள்ள இராணுவப் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

குறிப்பிட்ட இராணுவ தொழில்வாழ்க்கைக்குப் பின்னர், அவர் 1998 இல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபால் இராணுவ பணிக்குழாம் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வருடத்தில் அவர், நவாஸ் ஷெரீபின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை அறிவித்தார்.

அவர் 1999 இல் பாகிஸ்தானின் இராணுவச் சட்டத்தை அறிவித்து தலைமைப் பொறுப்பை ஏற்றார், அதன் பின் 2001 இல் பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர் 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.

2008 இல் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த அவர், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல சட்ட சவால்களை எதிர்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2016 இல் துபாயில் தஞ்சமடைந்த அவர், மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வந்தார்.

அந்த வகையில் மிக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இது செய்தி நிறுவனமான PTI இன் படி. 


Add new comment

Or log in with...