டெண்டுல்கர் பாராட்டு

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் அந்நாட்டின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 5 கோடி இந்திய ரூபாய் தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்றதன் மூலம், இந்தியாவில் உள்ள இளம் பெண்களுக்கு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கனவைக் கொடுத்திருப்பதாக அந்த இளம் அணிக்கு டெண்டுல்கர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் கடந்த புதனன்று (02) நடந்த மூன்றாவது டி20 போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் உலகக் கிண்ணம் வென்ற இந்திய இளம் மகளிர் அணியை பாராட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


Add new comment

Or log in with...