பொ.ஆ.மு 400 முதல் 'தமிழன் வழிபாடு' என்ற நூல் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் வழக்கத்தில் இருந்த தொன்மையான வழிபாட்டு முறைகளின் இன்றைய தொடர்ச்சி மற்றும் இன்று வழக்கத்தில் உள்ள அதன் நீட்சியையும் ஆதாரங்களுடன் பதிவு செய்கின்ற நூல். இயற்கையைப் போற்றி நன்றி செலுத்துவதாகவும் நமது முன்னோர் மூதாதையர் சான்றோர் பெருமக்களின் வீரம், சமூக நீதி, ஆதிக்க எதிர்ப்பு, பெண்ணுரிமை போன்ற பல நற்குணங்களை போற்றி வழிபடுகின்ற வழக்கத்தினை புறநானூற்றில் ஆரம்பித்து இன்றுவரை வழக்கத்தில் உள்ளனவற்றை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆய்வாளர் அ. ராஜா தமிழ்மாறன் எழுதியுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேச இந்தூர் நகரில் நடைபெற்ற 17வது பிரவசி பாரதிய திவஸ், சென்னை புத்தகக் கண்காட்சி, சென்னை இலக்கியத்திருவிழா, அயலகர் தமிழர் நாள், சென்னை சங்கமம், சமத்துவ பொங்கல் திருவிழா, பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட எனக்கு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டு வைத்த 'தமிழன் வழிபாடு' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவ்விழாவில் நூல் பற்றிய ஆய்வு, வாழ்த்துரையை கலைஞர் செய்திகள் தலைமை ஆசிரியர் ப.திருமாவேலன், தொல்லியல் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி, திமுக மாணவர் அணி தலைவர் இரா ராஜீவ் காந்தி ஆகியோர் வழங்கினார்கள்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டு தொல்லியல் துறை முன்னாள் தலைவர் புலவர் டாக்டர் செ. இராசு தனது வாழ்த்துரையில் கடல் மூழ்கி முத்தெடுப்பது போல, மண் குடைந்து பொன் எடுப்பது போல தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்து ஆய்வு செய்து பல பண்டைய பண்பாட்டுச் செய்திகளை அள்ளி அள்ளித் தருகிறார் அ. ராஜா தமிழ் மாறன். தமிழன் வழிபாட்டில் மறைந்துள்ள சில செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரின் வழிபாட்டு முறைகள் பற்றிய தெளிவான புரிதல் நம் தமிழின உறவுகளுக்கும் எனது குழந்தைகளுக்கும் வேண்டும் என்று நான் எண்ணியதே இந்நூல் உருவாக காரணமாக அமைந்தது. பொ. ஆ. முன் 400 ஆண்டுகள் முதல் இன்றுவரை தொடர் வழக்கத்தில் உள்ளவற்றை மட்டும் பிரித்தெடுப்பது என்பது சிக்கலான நூல் கண்டில் இருந்து ஒரு நூலை மட்டும் பிரித்தெடுத்து அந்நூலின் தொடர்பு அறுந்துவிடாமல் தொடர்ச்சியை எடுத்து உறுதிபடுத்திக் கொள்ள பெருமுயற்சியை எடுத்துக் கொண்டுள்ளேன் என்கின்றார் நூல் ஆசிரியர் அ. ராஜா தமிழ்மாறன்.
தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகமான எழிலினி பதிப்பகம் மிக நேர்த்தியான முறையில் 170 பக்கங்களில் பதிப்பித்துள்ளது.
எச்.எச். விக்ரமசிங்க...
Add new comment