காசா பகுதியில் இஸ்ரேல் சரிமாரி வான் தாக்குதல்

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை நடத்திய நிலையில் பிராந்தியத்தில் மற்றொரு பாரிய அளவிலான மோதல் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த வாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சம்பவத்தை தொடர்ந்தே நேற்று (02) அதிகாலை இந்த வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெனின் சுற்றிவளைப்பில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த வார இறுதியில் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய மத வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு இஸ்ரேலியர் கொல்லப்பட்டது உட்பட பலஸ்தீனர்களின் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்த பதற்ற சூழலில் இஸ்ரேலிய படைகள் மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டையும் வெடித்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு அந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு பலஸ்தீன தரப்பும் உரிமை கோரவில்லை.

இதனைத் தொடர்ந்து காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் மற்றும் ஆயுத உற்பத்தித் தளங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...