Friday, February 3, 2023 - 3:02pm
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபையில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவுக் கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (03) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா, சிவஞானம், மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர் பிரகாஷ், அம்பகங்க பிரதேச சபை தலைவர் யோகராஜா உட்பட இ.தொ.காவின் முக்கிய உறுப்பினர்களும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இந்த பிரசாரத்தின் போது இ.தொ.காவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment