நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு

தலங்கம, பெலவத்தை பகுதியில்

தலங்கம பெலவத்த பகுதியில் அதிசொகுசு மாடி வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திலிருந்து, வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலங்கம பொலிஸார் இச்சடலத்தை மீட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய கின்னம்பகுவ பகுதியைச்சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க .

என்ற 49 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 30 ஆம் திகதி வீட்டிலிருந்து (30) புறப்பட்டுச் சென்ற தமது சகோதரர் மீண்டும் திரும்பவில்லையென மரணமடைந்தவரின் சகோதரி வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

மேற்படி வர்த்தகரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளதுடன் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...