தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் விடுதலை

மெகசின் சிறைச்சாலையிலிருந்து

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு தமிழ் கைதிகள், ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு 2014 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

மற்றையவர், 2022 டிசம்பர் (13) நுவரெலியா நீதிமன்றத்தால் 06 மாத சிறைத்தண்டனை

விதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் (01) இந்த இரண்டு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


Add new comment

Or log in with...