அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று 2030 வரை அவர் ஜனாதிபதியாக நீடிப்பாரென தாம் நம்புவதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில்  போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாலித்த ரங்கே பண்டார, ஜனாதிபதி தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவாரென்று குறிப்பிட்டார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்ப ரென்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய ஜனாதிபதி பதவிக் காலத்தை ரணில் விக்கிரமசிங்க தற்போது வகித்து வரும் நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...