தேர்தலுக்கு முகங்கொடுக்க SLPP தயார் நிலையில்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அனைத்திற்கும் பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பது ஒரு சிலரது நிலைப்பாடு மாத்திரமே. எந்தத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்பதே பெரும்பாலானோரது நிலைப்பாடாகும். அதுவே எமது நம்பிக்கையுமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிரிவெஹெர விகாரைக்கு சென்ற முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு , கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறாது என்பது ஒரு சிலரது நிலைப்பாடு மாத்திரமே. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதேயாகும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மாத்திரமல்ல. எந்தவொரு தேர்தலிலும் நாம் பாரிய வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன "எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...