பூமிக்கு மிக அருகால் சிறு விண்கல் பயணம்

நிலவை விடவும் மிக நெருக்கமான தொலைவில் சிறிய விண்கல் ஒன்று நேற்று (27) பூமிக்கு மிகவும் அருகால் கடந்து சென்றது.

மினிபஸ் அளவான 2023 பி.யு. என்ற அந்த விண்கல் தென் அமெரிக்காவின் தெற்கு முனையால் 3,600 கி.மீ நெருங்கமாக பூமியை கடந்தது. இது செய்மதிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைவை விடவும் நெருக்கமானதாகும்.

ஒரு வாரத்துக்கு முன்னரே இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த விண்கல் பூமியை தாக்கினாலும் அதன் பெரும்பகுதி வளிமண்டத்திலேயே அழிக்கப்பட்டுவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமாக நாசா தெரிவித்தது.


Add new comment

Or log in with...